அதுக்கும் மேல!...தாறுமாறா சம்பளம் கேட்கும் நயன்தாரா...அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்....

by சிவா |
nayanthara
X

nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. எனவே, ஒரு பக்கம் பெரிய நடிகர்களின் படங்களில் டூயட் பாடினாலும், மறுபக்கம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

nayan

தற்போது அவர் தனது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நயன்தாராதான் கதாநாயகி. ஒருபக்கம் திரைப்படங்களை தயாரிக்கும் வேலையிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

nayan_main_cine

இதற்கு முன் அவர் ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக ஏற்றிவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அதிலிருந்தும் ரூ.5 கோடி உயர்த்தி ரூ.15 கோடியை தனக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும் என கேட்கிறாராம் நயன்தாரா.

நடிகர்களுக்கு பல கோடிகளை கொடுக்கும் போது எனக்கு கொடுத்தால் என்ன என்கிறாராம் அம்மணி...

அவர் சொல்வதும் சரிதான்!....

Next Story