தனுஷ் மட்டுமில்ல!. அல்லு அர்ஜூனையும் அசிங்கப்படுத்தும் நயன்!. வைரலாகும் வீடியோ!..

Published on: November 17, 2024
dhanush
---Advertisement---

Nayanthara: நயன்தாரா- தனுஷ் விவகாரம் பெட்ரோல் எதுவும் ஊற்றாமலேயே கோலிவுட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்தியளவில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதில் நயன்தாராவிற்கு நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களின் வழியாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கல்யாண வீடியோவை 27 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நயன்தாரா, 3 நொடிகள் வரும் வீடியோவிற்கு தனுஷ் ரூபாய் 10 கோடி கேட்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதையடுத்து தனுஷ்-நயன்தாராவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன.

Also Read

இதையும் படிங்க: நயன்தாராவை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… அவர் படத்துக்கு இந்த நிலைமையா?

குறிப்பாக நயன்தாராவிற்கு எதிரான பழைய வீடியோக்களை தூசு தட்டி பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இதில் 2016ம் ஆண்டு நடைபெற்ற சைமா விருதுகள் விழாவில் நயன்தாரா செய்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

விருது:

மேடையில் நயன்தாராவிற்கு விருது அறிவிக்கின்றனர். ஒட்டுமொத்த தென்னிந்திய நட்சத்திரங்களும் கீழே அமர்ந்திருக்க, தெலுங்கின் உச்ச நடிகர் அல்லு அர்ஜுன் விருதினை நயன்தாராவிற்கு வழங்க வருகிறார். அப்போது திடீரென மைக்கினை வாங்கும் நயன்தாரா கீழே அமர்ந்து இருக்கும் விக்னேஷ் சிவன் கையால் இந்த விருதினை வாங்க ஆசைப்படுவதாக தெரிவிக்க, விக்னேஷ் சிவன் மேடையேறி அல்லு அர்ஜுனிடம் இருந்து விருதினை வாங்கி நயன்தாராவிற்கு அளிக்கிறார்.

அல்லு அர்ஜூன்:

வீடியோவில் அல்லு அர்ஜுன் ஏமாற்றத்தினை மறைத்துக் கொண்டு புன்னகை செய்வதுடன் வீடியோ முடிகிறது. இந்த சம்பவம் நடந்து 8 வருடங்கள் கழித்து இன்று தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமாக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். குறிப்பாக அவரின் புஷ்பா சீரிஸ் படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.