கல்யாணம் ஆனாலும் இறங்காத மார்க்கெட்!.. டாப் கியர் போட்டு தூக்கும் நயன்தாரா..

Published on: June 5, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் நயன்தாரா, டாப் நடிகையாக இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம், இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஐயா படத்தில், சரத்குமார் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

விக்கி-நயன் திருமணம்

அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார். சிம்பு, பிரபுதேவா போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா, ஒரு கட்டத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரத்தில், நயன்-விக்கி ஜோடி சர்ச்சையில் சிக்கி, சமூக வலைதளங்களில் வைரலானது.

நயன்தாரா
Nayanthara

திருமணத்துக்கு பிறகும் நடிப்பு

பொதுவாக சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகைகள், திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார்கள். நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பழைய வரவேற்பு இருக்காது. படமும் சரியாக ஓடாது. ஆனால் நயன்தாரா விஷயத்தில் இது, நேர்மாறாக இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும், நயன்தாராவுக்கு இமேஜூம் குறையவில்லை. படங்களில் நடிக்கிற வாய்ப்பும் குறையவில்லை.

குவியும் பட வாய்ப்புகள்

இப்போது, ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கும் தனிஒருவன் பாகம் 2, மாதவன் நடிக்கும் டெஸ்ட் மற்றும் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கிறார். அத்துடன் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த படத்தை விக்னேஷ் சிவனே இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுபோல், 10 படங்கள் வரை நயன்தாராவுக்கு இப்போது கைவசம் இருப்பதாகவும் அதனால் தொடர்ந்து அவர் படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

நயன்தாரா
Nayanthara

இந்தியில் ஜவான்

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குநர் அட்லி, ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ஜவான் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்தி படவுலகில், நயன்தாராவுக்கு இது முதல் படம் என்பதால், இது ஹிட்டானால், அம்மணி பாலிவுட்டிலும் பிஸியாகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

elango

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.