கடைசி வரைக்கும் பாக்க விடல...! நயன்தாராவை பார்க்க 700 கி.மீ பைக்கில் வந்த கர்ப்பிணி பெண்....
நடிகை நயன்தாரா-விக்கி திருமணம் நேற்று கோலாகலமாக சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண கோலத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அச்சில் வார்த்த சிலை போல காணப்பட்டனர்.
வந்திருந்த அனைவரும் திருமண ஏற்பாடுகளை பார்த்து வாயடைத்து போய் நின்றனர். அந்த அளவிற்கு பாதுகாப்பு கெடுபிடிகளோடு திருமணம் நடைபெற்றது. அழைப்பிதழ்கள் இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை. QR கோடு ஸ்கேன் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சுமார் 700 கி.மீ. தூரம் பயணம் செய்து நயன்தாராவை காண சுருதி-சரத் என்ற தம்பதிகள் கேரளாவில் இருந்து நேற்று வந்துள்ளனர். ஆனால் அவர்களை உள்ளே விட அனுமதிக்க வில்லை. அதுவும் அந்த தம்பதிகள் கேரளாவில் இருந்து பைக்கிலயே வந்துள்ளனர்.
விசாரித்ததில் கர்ப்பிணியான தன் மனைவியில் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே அங்கு இருந்து வந்துள்ளதாக அந்த கணவன் தெரிவித்தார். நயன்தாராவின் தீவிர ரசிகையான தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என வருந்தி திரும்ப சென்றனர். இருந்தாலும் கர்ப்பிணியான மனைவியை அவ்ளோ தூரத்தில் இருந்து பைக்கில் கூட்டிட்டு வந்த செய்தி அறிந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.