லட்டு போல நயன்தாராவுக்கு கிடைத்த வாய்ப்பு!.. தீபிகா படுகோனால் இப்படி மிஸ் ஆகிடுச்சே!..

by Saranya M |   ( Updated:2025-05-01 10:34:50  )
ஷாருக்
X

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஜவான் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஷாருக்கானின் அடுத்த படமான கிங் படத்திலும் நடிக்கவிருந்த வாய்ப்பை இழந்துள்ளார் நயன்தாரா என தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் ஷாருக்கான் தீவானா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி தேவ்தாஸ், வீர் சாரா, பஹேலி, சக் தே இந்தியா, ஓம் சாந்தி ஓம் போன்ற பல இந்தி படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக நடித்து வரும் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான பதான், ஜவான் மற்றும் டங்கி உள்ளிட்ட படங்கள் ரூ. 2500 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அதிகமான சம்பளம் வாங்கி தற்போது உலக நடிகர்களின் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளார் ஷாருக்கான்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து உருவான ஜவான் திரைப்படம் உலக அளவில் ஹிட் அடித்து 1000 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து அசத்தியிருந்தார்.

நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். மேலும், ஜோடியாக தீபிகா படுகோனேவை தேர்ந்தெடுத்து வைத்த போது அவர் கர்பமாக இருந்ததால் ஓத்தி வைக்கப்பட்டு. பின்னர் ஜவான் படத்தில் நயன்தாராவுடன் நடித்து முடித்துவிட்டு இப்போது தீபிகாவும் குழந்தை பிறந்து நடிக்க தொடங்கியதால் மீண்டும் ஒப்பந்தம் படி அவரை வைத்தே படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர்.

தீபிகா படுகோன் நடிக்கத் தொடங்காமல் இருந்திருந்தால் நயன்தாராவிற்கே அந்த வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்கின்றனர். தமிழ் படங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை இழந்துவரும் நயன்தாரா இப்படத்திலும் தவற விட்டுள்ளார் என்கின்றனர். ஆனாலும், நயன்தாரா கைவசம் 7 முதல் 8 படங்கள் உள்ளன. அடுத்ததாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக கூறுகின்றனர். ஏற்கனவே லூசிஃபர் தெலுங்கு வெர்ஷனான காட் ஃபாதர் படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.

Next Story