பாதி உடம்ப காணோம்!.. என்னாச்சு செல்லம் உனக்கு!..ஒல்லியாகி ஷாக் கொடுத்த நயன்தாரா....

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. எனவே, ஒரு பக்கம் பெரிய நடிகர்களின் படங்களில் டூயட் பாடினாலும், மறுபக்கம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

nayanthara
தற்போது அவர் தனது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அழகாக இருந்த நயன் தற்போது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். ஏற்கனவே, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், தற்போது மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஒரு நகைக்கடை விளம்பரத்துக்கு அவர் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் ‘இப்படி எலும்பும் தோலுமா போயிட்டியே.. என்னாச்சு உனக்கு’ என பொங்க துவங்கி விட்டனர்.