தெலுங்கிலும் உச்சம் தொட்ட நயன்தாரா... அதனால தான் இவங்க லேடி சூப்பர் ஸ்டார்
ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் வலம் வரும் ஒரே ஒரு டாப் நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே. இப்போதும் எப்போதும் நயன்தாரா மட்டுமே டாப் நடிகையாக இருப்பார். வேறு யாராலும் இவர் இடத்தை பிடிக்கவோ, நிரப்பவோ முடியாது. அந்த அளவிற்கு ஒரு ஸ்ட்ராங்கான அஸ்திவாரத்தை அமைத்துள்ளார் நயன்தாரா.
பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரே ஒரு நடிகை என்பதால் தான் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். சரி நாம் விஷயத்திற்கு வருவோம். தற்போது நயன்தாரா தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார். மற்ற முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட இது இரு மடங்கு அதிகம் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் தெலுங்கிலும் நயன்தாரா தான் அதிக சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நயன்தாரா தற்போது தெலுங்கில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக நயன்தாராவிற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த காட்பாதர். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார். இந்த கேரக்டர் படத்தில் மிக குறைவான காட்சிகளில் மட்டும் தான் இடம் பெறுமாம். படம் முழுக்க வந்தாலும் பரவாயில்லை மிகவும் குறைவான காட்சிகளில் மட்டும் வருவதற்கா 4 கோடி ரூபாய் என மற்ற நடிகைகள் வாய் பிளந்து வருகிறார்கள்.
அதாவது நடிகர் சிரஞ்சீவி இந்த கேரக்டருக்கு நயன்தாராவை தான் நடிக்க வைக்க வேண்டும் என கேட்டு கொண்டாராம். அதனால் தான் நயன்தாரா எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறார்களாம். மேலும் தெலுங்கில் ஒரு படத்திற்காக ஒரு கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச சம்பளம் இது தான் எனவும் டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.