நயன்தாராவிடம் தொடரும் 'அந்த' கெட்ட பழக்கம்.! இதெல்லாம் உங்களுக்கு நல்லதில்லை மேடம்..,

by Manikandan |
நயன்தாராவிடம் தொடரும் அந்த கெட்ட பழக்கம்.! இதெல்லாம் உங்களுக்கு நல்லதில்லை மேடம்..,
X

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவுக்கு நிகராக தனது பெயருக்கு முன்னால், படத்தின் டைட்டில் கார்டிலேயே லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை இட்டுக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார் நயன்தாரா.

இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மனதில் நல்ல இடம் இருந்தாலும், தமிழ் சினிமாவட்டாரத்தில் இவருக்கு ஏகத்துதும் கெட்ட பெயர் தான்.

nayanthar ss

அதாவது, இவர் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் தங்களது ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம், அல்லது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களுக்கு மட்டுமே பட விளம்பரத்திற்கு கலந்து கொள்கிறார் என்பது ஒரு குற்றச்சாட்டாக எழுந்து வருகிறது.

nayan3_cine

இதையும் படியுங்களேன் - படையப்பா தமிழை விட அந்த மொழியில் தான் பெரிய ஹிட் .! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ரவிக்குமார் சார்.?!

அதாவது, அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக தியேட்டருக்கு எல்லாம் சென்று பார்த்து ப்ரோமோஷன் செய்திருந்தார். இதற்கு முன்னர் நெற்றிக்கண் திரைப்படத்திற்காக பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொண்டார். ராக்கி படத்திற்காக ஒரு ப்ரோமோஷன் வீடியோவில் பேசி நடித்து இருப்பார் நயன்தாரா.

இப்படி, தனது நிறுவன படங்களுக்கு மட்டும் விளம்பரத்திற்கு வருவேன் என நயன்தாராவின் போக்கு, அவரது எதிர்கால சினிமா வாழ்விற்கு நல்லதல்ல என்கிறது சினிமா வட்டாரம். நயன்தரவின் போக்கு அடுத்தடுத்த படங்களில் மாறுகிறதா என்பதை அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆகும் போது பார்க்கலாம்.

Next Story