தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயினை கொண்டாடி, அவருக்காக படம் ஓடியதெல்லாம் 90களில் தான். அப்படி, இருந்த தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என டைட்டில் கார்டில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் முன்னணி நாயகியாக நடித்த பல படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன. அதுவும், பெரிய ஹீரோ படங்கள் போல 4 மணி காட்சிகள் எல்லாம் திரையிடும் அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

அவர் முதன்மையான நாயகியாக நடித்து, தற்போது உருவாகியுள்ள திரைப்படம் O2. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ் என்பவர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ட்ரீம் வாரியார் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
இதையும் படியுங்களேன் – ஷ்ஷ்ஷ்.! பிரமாண்ட இயக்குனர் வீட்டில் இப்படி ஒரு சோக நிகழ்வா.?! டைவர்ஸ் கூட வாங்க முடியாதே.?!

இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒரு பஸ் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விடுகிறது. அதில் ஒரு குழாய் இருக்கிறது. அதன் மூலம் மட்டுமே வெளியில் இருந்து ஆக்சிஜன் கிடைக்கிறது. அதில் சிக்கிக்கொண்ட பயணிகளில் நயன்தாரா இருக்கிறார்.
அந்த பஸ்ஸில் இருந்து, எப்படி அனைவரும் காப்பாற்றப்பட்டனர். நயன்தாரா நிலைமை என்னவானது என்பது பற்றி பரபரப்பாக கூறியிருக்கும் திரைப்படமாக இருக்கும் என இந்த O2 டீசர் வழியே தெரிகிறது. இத்திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.