வாய்ப்புக்காக இப்படி ஓபனா இறங்குவீங்க? நயன்தாரா டிரெஸால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்!..
Nayanthara: நடிகை நயன்தாரா தன்னுடைய சினிமா கேரியரில் தொய்வை சந்தித்து வரும் நிலையில், அதை சரிப்படுத்த ரொம்பவே ஆர்வமாக இறங்கிவிட்டதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர். இதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தாலும் சிம்புவுடனான காதலால் சினிமா கேரியரில் தடுமாறினார். ஒரு சின்ன பிரேக் எடுத்தவர், சிவாஜி படத்தில் ஒற்றை பாடல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இதையும் படிங்க: கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…
அதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். ஏறத்தாழ நிறைய ஹிட் படங்களில் நடித்தார். அதிலும், தனி நாயகியாக அவர் நடித்த நிறைய படங்கள் பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதனால் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். இயக்குனர் விக்னேஷ் சிவனை சில வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்துக்கு பின்னர் படிப்படியாக நயனின் கேரியர் சரிவையே சந்தித்து வருகிறது. தொடர்ச்சியாக 12க்கும் அதிகமான படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் சினிமாவை விட பிசினஸிலும் அதிக ஆர்வம் காட்டினார். ஸ்கின்9, ஃபெமி என அவர் பிசினஸை தொடங்கி தொடர் புரோமோஷன் செய்து வந்தார். மறுபுறம் இன்ஸ்டாகிராம் ஓபன் செய்து அதிலும் நன்றாக காசு பார்க்க தொடங்கினார்.
இதையும் படிங்க: யோவ் யாருய்யா நீங்க? கமல் செஞ்ச உதவி.. வாயடைத்து நின்ற விஜயகாந்த்! கேப்டனுக்கே டஃப் கொடுத்தாரா
இது ஒருபுறமிருக்க தன்னுடைய சினிமா கேரியரை மீட்டெடுக்க, விருது விழாக்களில் கொஞ்சம் ஓபனாகவே இறங்கி இருக்கிறார். பொதுவாக புடவை கட்டி அடக்கமாக வரும் நயன், ஜிக்யூ மோஸ்ட் இன்ஃப்ளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024 விழாவில் கருப்பு உடையில் கொஞ்சம் கிளாமராகவே வந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே நயன் கொடுக்கும் போஸ்களும் எடக்கு மடக்காகவே இருப்பதாக ரசிகர்களும் அங்கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.