போடு.. சென்னையின் புகழ்பெற்ற பழமையான தியேட்டரை சொந்தமாக வாங்கிய நயன்தாரா?!

Published on: May 20, 2023
---Advertisement---

லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா சென்னையில் உள்ள புகழ்பெற்ற தியேட்டரை சொந்தமாக வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை நயன்தாரா, ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் தனது சிறந்த நடிப்புத் திறமையால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார். சமீபத்தில் தமிழில் அண்ணாத்த,O2, காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் படங்களில் நயன்தாரா காணப்பட்டார்.

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னையில் பிரபலமான அகஸ்தியா திரையரங்கை சொந்தமாக வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட இடத்தில் புதிய தியேட்டரை கட்ட நயன்தாரா திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என நான்கு தலைமுறை நடிகர்களின் திரைப்படங்கள் இந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ளன. 1004 இருக்கைகளுடன் செயல்பட்ட அகஸ்தியா திரையரங்கம் சென்னையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றாகும்.

muthu

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment