குழந்தைகள் வந்த நேரம் எல்லாத்தையும் மாத்திடுச்சி!..அந்த நாளுக்காக காத்திருக்கும் நயன்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. புது அம்மாவாக அவதாரம் எடுத்திருக்கும் நயன் குழந்தைகள் வந்ததில் இருந்து மீடியாவில் இருந்து தூரத்தில் இருப்பதாக தெரிகிறது.
அந்த அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வருகிறார். அவருடன் நெருக்கமானவர்களும் நயன் இப்பொழுது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் திருமணமாகி நயன் தன்னுடைய முதல் பிறந்த நாளை வருகிற 18 ஆம் தேதி கொண்டாட போகிறார்.
திருமணத்திற்கு பிறகு மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட கூடிய பிறந்த நாளை மிகவும் வரவேற்ப ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார் நயன். வழக்கமாக தன்னுடைய பிறந்த நாளை வெளி நாடுகளில் தான் கொண்டாடுவாராம் நயன். அதுவும் விக்கி அவரது வாழ்க்கைக்குள் வந்த பிறகு அவருடன் தான் வெளி நாடுகளில் கொண்டாடி வந்தார்.
ஆனால் இப்பொழுது இரட்டை குழந்தைகள் அதனால் மிகவும் பிரம்மாண்டமாக தன்னுடைய வீட்டிலேயே கொண்டாட போகிறாராம். தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் வீட்டிற்கு வரவழைத்து கொண்டாட போகிறாராம். ஒரு பக்கம் குழந்தைகளின் நலனையும் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் நயன் மற்றும் விக்கி.