Cinema News
கல்லா கட்ட நினைத்து நயன்தாரா தயாரித்த 5 திரைப்படங்கள்!.. ரிசல்ட் இதுதான்!…
Nayanthara: ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. அதன்பின் சில வருடங்கள் சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை. அஜித் நடித்த பில்லா படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் ‘ராஜா ராணி’ படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அதன்பின் விஜய், அஜித், ரஜினி என பெரிய ஸ்டார்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாவும் மாறினார். ரசிகர்களை அவரை லேடி சூப்பர்ஸ்டார் எனவும் அழைக்க துவங்கினர். ஒருகட்டத்தில் சொந்தமாக திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார். நானும் ரவுடிதான் படத்திலிருந்துதான் இது துவங்கியது.
இதையும் படிங்க: இது வேணாம்.. ஸ்கிரீனை கிழிச்சுடுவாங்க! தயாரிப்பாளர் பேச்சையும் மீறி ரஜினி படத்தில் இருந்த அந்த சீன்
தனுஷின் தயாரிப்பில்தான் அப்படம் உருவானது. ஆனால், பட்ஜெட் அதிகமாகிக்கொண்டே போனதால் அவர் பணம் கொடுக்க மறுக்க விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து மீதி பணத்தை போட்டு அந்த படத்தை எடுத்து வெளியிட்டனர். அதன்பின் சில திரைப்படங்களை நயன்தாரா தயாரித்தார்.
துவக்கத்தில் சில படங்களை வாங்கி தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டனர். அப்படி நயன்தாரா வாங்கி வெளியிட்ட படம்தான் ராக்கி. கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய முதல் படம் இது. இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க: 18 படங்கள் நடிச்சும் வாய்ப்பில்லாமல் தவித்த விஜயகாந்த்!.. மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய அந்த திரைப்படம்…
கூழாங்கல் என்கிற படத்தை நயன்தாரா தயாரித்து ஓடிடியில் இப்படம் வெளியானது. விமர்சனரீதியாக இப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. பல திரைப்பட விருது நிகழ்ச்சிகளிலும் இப்படம் திரையிடப்பட்டு பல விருதுகளையும் பெற்றது. ஆனால், நயனுக்கு லாபம் ஒன்றுமில்லை. இப்படம் வந்ததே ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.
அதேபோல், மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்கிற படத்தை தயாரித்து நடித்தார். ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. மேலும், நெற்றிக்கண் என்கிற படத்தை தயாரித்து நடித்தார். இந்த படமும் அவருக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. அதன்பின் அவர் தயாரித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் பெரிய லாபத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நான் செய்தது பெரிய தப்பு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன பாரதிராஜா..