நயன்தாரா மாமியார் பேட்டிக்கு பின்னால் இத்தனை விஷயம் இருக்கா... அதுக்குன்னு இப்படியா!

by Akhilan |
நயன்தாரா மாமியார் பேட்டிக்கு பின்னால் இத்தனை விஷயம் இருக்கா... அதுக்குன்னு இப்படியா!
X

Nayanthara_Wikky

நயன்தாராவை ஆகாஓஹோ என அவர் மாமியார் புகழ்ந்ததற்கு காரணம் வேறு என்ற புது தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளது.

தமிழில் ஐயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தமிழ் சினிமாவின் நடிகையாக பட்டு கம்பளம் அவருக்கு விரிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்தது. அப்போது சிம்புவின் இயக்கத்தில் உருவான வல்லவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

நயன்தாரா

Nayanthara_Wikky

அந்த படத்தில் இருந்து இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரம் கிசுகிசுத்தது. இருவரின் லிப்லாக் படமெல்லாம் வெளிவந்து வைரலான நேரத்தில், இருவருமே ப்ரேக் அப் சொல்லி பிரிந்து விட்டனர்.

இதை தொடர்ந்து சினிமாவில் சில காலம் தள்ளி இருந்த நயன் சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஒற்றை பாடலுக்கு ஆடி மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். இதனால் அவர் மார்க்கெட் மேலும் உச்சத்தை அடைந்தது.

Nayanthara_Wikky

இருந்தும் விதி யாரை விட்டது. அடுத்து நயனுக்கு லவ் வந்தது நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா மீது. ஓபனாகவே வெளியுலகத்தில் சுற்றி திரிந்தனர். அவருக்காக இந்து மதத்திற்கும் நயன் மாறி இருந்தார். கையில் பிரபு என அவர் போட்டுக் கொண்ட டாட்டூ எல்லாம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பிரபுதேவாவும் தன் மனைவியை விவகாரத்து செய்து விட்டார். விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கபட்ட போது, எதிர்பாராத விதமாக இருவருக்கும் ப்ரேக் அப் ஆனது.

இதையும் படிங்க: நயன்தாரா இப்படினா அவங்க அம்மா அதுக்குமே மேல… வைரலான விக்னேஷ் சிவன் தாயார்…

அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த நயனுக்கு, இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஆசை வந்தது. இருவரும் நான் ரவுடி தான் படப்பிடிப்பிலேயே காதலை சொல்லிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த காதல் நயனுக்கு மிகப்பெரிய பூஸ்ட் என்றே சொல்ல வேண்டும். அவர் எங்கு இருக்கிறார் என்பதை விக்னேஷின் சமூக வலைத்தள கணக்கில் தெரிந்து கொள்ள முடிந்தது. பண்டிகை காலங்களில் இருவரும் போடும் ஜோடி போட்டோக்களுக்கே பலரும் ரசிகர்களாகினர்.

Nayanthara_Wikky

ஒரு கட்டத்தில் தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர் இருவரும். பல வருட காதலை தொடர்ந்து இந்த வருடம் ஜூன் மாதம் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்வை படமாக நெட்ப்ளிக்ஸ் விரைவில் வெளியிடும் என அறிவித்தது.

தொடர்ந்து நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகி விட்டோம் என விக்னேஷ் சிவன் அறிவித்தார். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பலரும் நயனை விமர்சிக்க தொடங்கினர். இருந்தும் நாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

சமீபத்தில் மருமகளை ஆஹாஓஹோ என புகழ்ந்து விக்னேஷ் சிவனின் தாயார் பேட்டி கொடுத்திருந்தார். முதலில் இது சாதாரணமாகவே பார்க்கப்பட்டாலும், ஓவராக ஜால்ரா அடிக்கவும் பின் விசாரணையை ஒரு குழு துவக்கியது. அதில் நயன் மீது பெரிய சர்ச்சை இருப்பதால் அவரின் அடுத்தடுத்த படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் தானே பேசினால் நன்றாக இருக்காது என நினைத்த நயன் தன் மாமியரை வைத்து இந்த விளையாட்டை ஆடி இருப்பதாக கூறிகின்றனர்.

Next Story