த்ரிஷாவை காரணம் காட்டி சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா… என்னவா இருக்கும்??

by Arun Prasad |
Trisha and Nayanthara
X

Trisha and Nayanthara

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா தற்போது தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கவுள்ளார்.

 Nayanthara

Nayanthara

இந்த நிலையில் த்ரிஷாவை காரணம் காட்டி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் திரைப்படத்தில் இருந்து நயன்தாரா விலகியது குறித்தான ஒரு சூடான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது பிரபல மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசஃப் மோகன்லாலை வைத்து “ராம்” என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். அதில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மொரோக்கோவில் நடைபெற்றதாம். இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ram Movie Crew

Ram Movie Crew

இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு இதில் நயன்தாரா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துவிட்ட நிலையில் இத்திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளிவருகின்றன.

இதையும் படிங்க: “இந்த படத்தை எடுத்ததுக்கு ரொம்ப ஃபீல் பண்ணேன்”… ஓப்பனாக பேசிய மிஷ்கின்… அடப்பாவமே!!

Trisha and Nayanthara

Trisha and Nayanthara

நயன்தாரா இத்திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்கு த்ரிஷாதான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது இத்திரைப்படத்தில் தனக்கு ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தை ஒதுக்கியிருந்தாலும் த்ரிஷாதான் கதாநாயகி என்பதால் அவருக்கு பிறகுதான் தன்னுடைய கதாப்பாத்திரம் பேசப்படும் என்ற காரணத்தால் நயன்தாரா இத்திரைப்படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

Next Story