ஸ்ருதிஹாசன் மிஸ் செய்த படத்தில் நடித்து ஹிட் கொடுத்த நயன்தாரா.....
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்த ஸ்ருதி அதன் பின்னர் பெரிதும் படங்களில் நடிக்கவில்லை.
இறுதியாக ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் என்ற படம் வெளியானது. எஸ்.பி.ஜெனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த லாபம் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையே பெற்று தந்தது. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் ஸ்ருதிஹாசன் அடுத்தடுத்து எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில் இவர் தவறவிட்ட படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழில் காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜியும், என்.ஜெ.சரவணனும் சேர்ந்து இயக்கி இருந்த மூக்குத்தி அம்மன் படத்தை தான் ஸ்ருதிஹாசன் தவறவிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஆர்.ஜே.பாலாஜியின் முதல் சாய்ஸாக இருந்தது ஸ்ருதி ஹாசன் தானாம். பின், சில காரணங்களால் ஸ்ருதி ஹாசனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
அதன் பின்னர் தான் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமாகி நடித்துள்ளார். கடந்தாண்டு ஓடிடியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு நயன்தாராவும் ஒரு காரணம் என்பது தான் உண்மை. மூக்குத்தி அம்மன் என்ற கேரக்டருக்கு நயன்தாரா கச்சிதமாக பொருந்தி இருந்தார்.
ஒருவேளை ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடித்திருந்தால் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் அவருக்கு இந்த கேரக்டர் சுத்தமாக பொருந்தி இருக்காது. ஏற்கனவே பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் சாய் பல்லவி கேரக்டரில் நடித்து சொதப்பி இருந்தார். எனவே இவர் நடிக்காமல் இருந்ததே நல்லது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.