ஒரு நிமிஷ விளம்பரத்துக்கு இத்தனை கோடியா?.. ஓவர் ஆட்டம்போடும் நயன்தாரா!. வயித்தெரிச்சலில் சக நடிகைகள்!..

Published on: September 30, 2023
---Advertisement---

Nayanthara: தமிழ் சினிமா நடிகை நயன்தாரா சமீபத்தியமாக எல்லா விஷயத்துக்குமே ஓவராக பேமெண்ட்டாக வாங்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அந்த வகையில், நயன் விளம்பரத்துக்கு பெத்த காசை சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட் லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஹிட் படங்களில் நடித்தவர். சமீபத்தில் வெளியான ஜவான் என்ற இந்தி திரைப்படத்திலும் ஷாருக்கானின் ஜோடியாக நடித்தவர். இதனால் இந்தியில் அம்மணிக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இதையும் படிங்க: பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!..

தற்போது 9ஸ்கின் என்ற மேக்கப் வலைத்தளத்தினை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார் நயன். சினிமா ப்ரோமோஷன்களில் கலந்து கொள்ளாதவர். இந்த பிராண்ட் அறிமுக விழாவில் கணவருடன் கலந்து கொண்டார்.

மகன்களின் முதல் பிறந்தநாளை ட்வின் டவரில் கொண்டாடி இருந்தார். ஒரு வருடம் கழித்து மகன்களின் புகைப்படத்தினையும் இன்ஸ்டாவில் ரிலீஸ் செய்தனர். ஒரு பக்கம் சினிமா வாய்ப்புகள், இன்னொரு பக்கம் பிசினஸ் என ஓவர் பிஸியில் சுற்றி வருகின்றார்.

சமீபத்தில் தொடங்கிய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனை செய்வதற்கே பெத்த தொகை வாங்கி கொண்டு பதிவிட்டு வருகின்றார். ஜவான் படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்தார். தொடர்ச்சியாக படத்தின் ரிவியூக்களின் ஸ்டோரியையும் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: லியோ ப்ளாப் ஆகிடுமா?.. அடேய் உங்க லாஜிக்குல தீய வைக்க… கடுப்படிக்கும் விஜய் ரசிகர்கள்!

ஆனால், ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படத்துக்கு அம்மணி ஒரே போஸ்ட் போட்டு பெரிய தொகையை ஆட்டைய போட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட நயன் தன்னுடைய தேவைக்காக 25 லட்ச ரூபாயிற்கு தனி விமானம் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில் 50 விநாடி விளம்பரத்துக்கு 5 கோடி ரூபாயை சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு விளம்பரத்துக்கே இவ்வளவு தொகையா? நாங்க மட்டும் என்ன தொக்கா என மற்ற நடிகைகளும் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.  

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.