நயன்தாராவுடன் விக்னேஷ் எடுத்த செல்பி.. ஹார்ட்டின் விட்ட சமந்ததா...என்னடா நடக்குது இங்க?!....

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும், அவ்வப்போது வெளியே சென்று ஊரை சுற்றி நெருக்கமாக நின்று புகைப்படங்களை வெளியிட்டு 90 கிட்ஸ் மனதை அலைக்கழித்து வருகின்றனர். அவ்வப்போது நயனை கொஞ்சி கொஞ்சி பதிவுகளை போட்டு நயனின் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன்.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், சென்னை போய்ஸ்கார்டனில் 2 வீடுகளை வாங்கியுள்ள நயன்தாரா அங்கு குடியேறியவுடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஒருபக்கம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதேபோல், சமந்தாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பரபர வேலைகளுக்கு நடுவே ஒரு நேரம் கிடைத்ததாக கூறி நயனுடம் செல்பி எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், படம் சென்சாருக்கு செல்ல வேலைகள் நடந்து வருவதாகவும், நல்லது நடக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு சமந்தா ஹார்ட்டின் விட்டுள்ளார்.