nayanthara
இன்று நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. அந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் லவ் ஸ்டோரி, அவர் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான நிகழ்வுகள் இதை பற்றி மட்டும் அதில் காட்டாமல் அதோடு ஒரு பெண்ணாக இருந்து இந்த அளவுக்கு எப்படி உச்சத்தை அடைந்தார் என்பதை பற்றிய ஒரு கதையாகவும் அந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நிறைய விஷயங்கள் இருந்தாலும் அதில் முக்கியமாக நம் கண்களில் படுவது நயன்தாராவின் போராட்டம். ஒரு பெண்ணாக எப்படி தனக்கு வந்த சோதனைகளை களைந்து வெளியில் வந்தார். ஒரு கட்டத்தில் நமக்கும் ஒரு லவ் கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்த போது விக்னேஷ் சிவனுடனான பழக்கம் ,அதன் பிறகு அவர் வாழ்க்கையில் நடந்த பல நல்ல விஷயங்கள் என இந்த டாக்குமெண்டரியில் சொல்லப்பட்டிருக்கிறது .
இதையும் படிங்க: Nayanthara: நயன்தாரா மேல காதலை விட அதுதான் அதிகமாம்… விக்னேஷ் சிவன் சொல்ற அந்த வார்த்தை தான் கவிதை!
இந்த டாக்குமெண்டரி ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தது .நயன்தாரா திருமணம் முடிந்ததுமே இந்த டாக்குமெண்டரியை ரிலீஸ் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் என்ஓசி பிரச்சனையால் அது இவ்வளவு தூரம் நீண்டு கொண்டே போய்விட்டது . கடைசியில் இந்த டாக்குமென்டரி ரிலீஸ் ஆகுமா ஆகாதா என நிறைய பேர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
ஆரம்பத்தில் நயன் அவருடைய திருமணத்தை திருப்பதியில் பண்ண வேண்டும் என நினைத்தார். ஆனால் அதை பண்ண முடியவில்லை. இந்த டாக்குமெண்டரியில் நயன்தாரா ஏகப்பட்ட விஷயங்களை சொல்லி இருக்கிறார். ஒரு நாளிதழில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தார் நயன்தாரா .
அப்படியே தொடர்ந்து பல வாய்ப்புகள் வர பல நல்ல நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இப்படி ஏறுமுகமாக இருந்த அவரது வாழ்க்கையில் சிறிது இறங்கு முகமும் ஆரம்பித்தது. கஜினி நேரத்தில் அவர் ரொம்பவே வெயிட் போட்டு கூடவே டிப்ரஷன்லயும் இருந்தார். கஜினி படத்தால் நிறைய பாடி ஷேமிங்கிற்கும் ஆளானார் நயன்தாரா. அதை அப்படியே கட் பண்ணினால் பில்லா படம் .அதில் பியூட்டிஃபுல்லான ஒரு மாடர்ன் கேர்ளாக அதுவும் பிகினி உடையில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் நயன்.
பில்லா படத்தில் அவர் அணிந்திருந்த பிக்னி உடையை அனைவரும் கிண்டல் செய்தார்கள். இதற்கு நயன்தாரா இது என்னுடைய டிரான்ஸ்பர்மேஷன். இதை நான் ரொம்பவே சூப்பரா பார்க்கிறேன் என ஒரு பாசிட்டிவ்வான நோட்டை வெளிப்படுத்தினார். அது மட்டுமல்ல அவருடைய பாஸ்ட் ரிலேஷன்ஷிப் பத்தியுமே பேசி இருக்கிறார். ஆனால் அந்த நபரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க: நீங்க பண்றது சரியில்ல?!… ஜோதிகாவை தொடர்ந்து சூர்யாவுக்காக களமிறங்கிய இயக்குனர்!…
அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் பாஸ்ட் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்பட்டு தான் நயன்தாரா சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர் சினிமாவில் நடிக்கக் கூடாது என சொன்னாராம். இதனாலே சினிமாவை விட்டு விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். இவருடைய பாஸ்ட் ரிலேஷன்ஷிப் பற்றி நாகார்ஜுனாவும் கூறி இருப்பார் .
நாகார்ஜுனாவுடன் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நயன்தாராவுக்கு அவர் சொன்ன முன்னாள் காதலரின் போன் அடிக்கடி வருமாம். அந்த போன் வந்தாலே படக்குழு ‘ஐய்யய்யோ இப்ப என்ன ஆகப்போகுதோ’ என்ற ஒரு பயம்தான் வருமாம். அந்த அளவுக்கு அந்த நபரால் நயன் கொஞ்சம் டார்ச்சரில் இருந்ததாக நாகர்ஜுனா கூறி இருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக நயன்தாரா சொன்ன அந்த பாஸ்ட் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபர் பிரபுதேவா தான் என கமெண்டில் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…