பட பூஜை முடிந்த உடனே பரம சந்தோஷம் போல!.. தனியாக கணவருக்கு ட்ரீட் கொடுத்த நயன்தாரா.. நச் க்ளிக்ஸ்!..

Published on: December 15, 2023
---Advertisement---

நடிகர் அஜித் குமார் ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை தூக்கி அடித்த நிலையில், கடந்த ஒரு வருடமாக அடுத்த படத்தை ஆரம்பிக்க தயாரிப்பாளர் கிடைக்காமல் அலைந்து வந்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில், லலித் குமார் தயாரிப்பில் எல்ஐசி படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

அந்த படத்தின் பட பூஜைக்கு நயன்தாரா ஏன் வரவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அந்த படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூங்கமா பாத்தாலும் வெறி அடங்காது!… மொத்த அழகையும் காட்டும் யாஷிகா ஆனந்த்…

இந்நிலையில், கணவருக்கு ஒரு வழியாக பட வாய்ப்பு கிடைத்த நிலையில், ஏதோ ஒரு கோயிலில் பூஜை போட்டு கணவன் மனைவி இருவரும் பக்தி மோடிலேயே ரொமான்ஸ் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர்.

இந்த ஆண்டு நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர், தற்போது அன்னபூரணி படத்தை ரிலீஸ் செய்திருந்தார். லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லாதீங்க நிறைய பேர் திட்டுறாங்க என பேட்டிக் கொடுத்து பரபரப்பை கிளப்பினார்.

இதையும் படிங்க: ஒரு ரூபாய் கணக்கு பார்த்த தயாரிப்பாளர்.. எம்.ஆர்.ராதா மகன் செஞ்சதுதான் ஹலைட்!..

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாக உள்ள எல்ஐசி படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைக்க உள்ளார். அதன் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், அந்த படத்தின் டைட்டில் தொடர்பாக தற்போது புத்ய சர்ச்சை ஒன்றும் எழுந்துள்ளது. இந்த படத்தையாவது திட்டமிட்டபடி எடுத்து முடித்து ஹிட் கொடுப்பாரா விக்னேஷ் சிவன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.