நடிகை நயன்தாரா புதிதாக பல தொழில்களை தொடங்கி நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் ஒரு ஆரம்பித்த ஒரு புதிய தொழில் தான் சானிட்டரி நாப்கின் பிசினஸ். Femi9 என அதிலும் தனது நயன் எனும் பெயர் வரும்படி பிராண்டுக்கு பெயர் வைத்து புதிய தொழிலை ஜோராக ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
சேலத்தில் இன்று அந்த சானிட்டரி நாப்கின் ஊழியர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் நீயா நானா கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: யாருப்பா விஜய்யா?.. மாநாடு சிம்புவோன்னு நினைச்சிட்டோம்.. இவருக்கு எதுக்குப்பா டீஏஜிங் தண்டச்செலவு!
நிகழ்ச்சியில் நயன்தாரா பேசும் போது, மைக்கை பிடித்து அனைவருக்கும் வணக்கம் எனக் கூறினார் அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பு “ ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்“ ஐயா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒலிபரப்பியதும் அதைப் பார்த்து நயன்தாரா ஒரு நிமிடம் வெட்கப்பட்டு, சிரித்து விட்டு அதன் பின்னர் தனது பேச்சை ஆரம்பித்தார்.
இந்த பிசினஸில் சுயநலம் இருந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் பொது நலம்தான் சானிடரி நாப்கின் தொழில் பக்கம் தனது கவனத்தை திருப்பியது எனக் கூறினார். முன்பெல்லாம் பெண்கள் சானிட்டரி நாப்கின் என்கிற வார்த்தையை பயன்படுத்தவே தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்போது தங்களுக்கு என்ன பிராண்ட் சானிட்டரி நாப்கின் வேண்டும் என கேட்கும் அளவுக்கு அந்த வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்ததே பெரிய வெற்றி எனக் கருதுகிறேன் என்றார்.
இதையும் படிங்க: விக்கி உங்க அடுத்த படத்துல இது கண்டிப்பா இருக்கனும்! விஜய் டிவி புகழ் கோபிநாத் வைத்த கோரிக்கை
மேலும், இன்னும் பல கிராமங்களில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் பயன்பாடு குறித்த சரியான விழிப்புணர்வு சென்று அடையவில்லை என நினைக்கிறேன். அவர்கள் அனைவருக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த துறையில் ஈடுபட்டுள்ளேன் என பேசினார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…