அடிதூள்!.. நல்ல நாள் அதுவுமா அடுத்த பிசினஸை ஆரம்பிச்சிட்டாரே நயன்தாரா!.. என்ன தொழில்னு பாருங்க!..

Published on: October 25, 2023
---Advertisement---

நடிகை நயன்தாரா சினிமாவில் ஒரு பக்கம் நடித்து வந்தாலும், அடுத்த கட்டமாக பிசினஸ் உமனாக ஜொலிக்கவே முயற்சி செய்து வருகிறார். அதற்காகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை தொடங்கிய நயன்தாரா சமீபத்தில் ஸ்கின் கேர் பிசினஸை ஆரம்பித்து இருந்தார்.

இந்நிலையில், அடுத்ததாக பெண்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அத்தியாவசியமான நேப்கின் பேடுகளை விற்கும் தொழிலை கையில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. அட நம்ம லெஜண்ட் அண்ணாச்சியை பார்த்தீங்களா.. விஜயதசமிக்கு கலக்குறாரே!..

தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து FEMI9 என அதிலும் தனது நயன் பெயரை கொண்டு வந்து உருவாக்கி உள்ள நேப்கின் பேடுகளை அடுக்கி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “பெருமைக் கொள்கிறேன்” என தமிழில் கேப்ஷன் கொடுத்து ஒட்டுமொத்த பெண்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார்.

ஜவான் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக கமல் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ள நயன்தாரா கைவசம் மண்ணாங்கட்டி, அன்னபூரணி உள்ளிட்ட படங்களையும் ரிலீஸுக்கு தயாராக வைத்துள்ளார்.

இதையும் படிங்க: நல்லா தளதளன்னு இருக்கியே!.. வளஞ்சி நெளிஞ்சி போகும் அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்…

சினிமாவை தாண்டி பல தொழில்களிலும் கவனத்தை செலுத்தி வரும் நயன்தாரா தனது இரு மகன்களான உயிர் மற்றும் உலகத்துக்கு ஏகப்பட்ட சொத்துக்களை சேர்த்து வைக்கும் முடிவில் களமிறங்கி உள்ளார் என்றும் எப்போதுமே தனது பெயர் மக்கள் மத்தியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்யும் வகையில் புதிய புதிய தொழிலை தொடங்கி நடத்தி வருகிறார்.

சினிமா மற்றும் பிசினஸ் என சிறப்பாக செய்து ரியல் லேடி சூப்பர்ஸ்டாராகவே ஆஃப் ஸ்க்ரீனிலும் மாறியுள்ளார் நயன்தாரா.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.