சினிமாவை நம்பாத நயன்தாரா... புதிய தொழில் தொடங்கினார்!

by பிரஜன் |   ( Updated:2021-12-11 03:25:14  )
nayanthara
X

nayanthara

நடிகை நயன்தாரா புதிய தொழில் துவங்கி பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.

வயசானாலும் அழகிய நடிகையாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் லிஸ்டில் இருந்து கீழே இறங்காமல் பல வருடங்களாக இடத்தை பிடித்துக்கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. கேரளாவில் பிறந்து வளர்ந்து லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்னர் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக தடம் பதித்தார். அதையடுத்து ரஜினி, அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: எந்த டிரெஸ் போட்டாலும் அத மறைக்க முடியலயே!…. ஏடாகூடமா போஸ் கொடுத்த கிரண்….

இந்நிலையில் நயன்தாரா பிரபல தோல் மருத்துவர் Dr.ரெனிட்டா ராஜன் உடன் இணைந்துThe Lip Balm Company எனும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த கம்பெனியின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியிட்டுள்ளார். ஒரு வேலை சினிமா டிமிக்கி கொடுத்தாலும் தொழிலை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்று இந்த முடிவெடுத்திருப்பார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story