இதை பார்த்தா நயன்தாரா பத்தி யாருமே இனி அப்படி தப்பா பேசமாட்டாங்க!.. எங்கே, என்ன பண்றாரு பாருங்க!

நடிகை நயன்தாரா டெஸ்ட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்ததை பலரும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது நெட்ஃபிளிக்ஸ் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்துக்கொண்டு விளக்கேற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான எஸ். சசிகாந்த் இயக்கத்தில் உருவாகிய டெஸ்ட் படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். நடிகை மீரா ஜாஸ்மின் 10 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையத்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பிரபல கிரிக்கெட்டராக இருக்கும் சித்தார்த், அவரின் குணத்தை புரிந்துக்கொண்ட மனைவியாக மீரா ஜாஸ்மின், தன் ஹைட்ரோ பெட்ரோல் கண்டுபிடிப்பை நிறைவேற்ற போராடும் மாதவன், குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நயன்தாரா என அனைவரும் தங்களது கதாப்பாத்திரத்தில் அசத்தலாக நடித்திருந்தனர். இந்த படத்தில் கிரிக்கெட் பெட்டிங்கை மையாமாக வைத்து படத்தை எடுத்துள்ளார் எஸ். சசிகாந்த்.
கடந்த சில நாட்களாக நடந்து வரும் டெஸ்ட் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்துக்கொள்ளாமல் இருந்ததற்கு, பெரிய பட்ஜட் படத்தின் நிகழ்ச்சியில் தான் பங்கேற்பாரா, மூக்குத்தி அம்மன் 2 பூஜையில் மட்டும் கலந்துக்கொண்டாரே என பல கேள்விகள் ஏழும்பியிருந்த நிலையில், அதற்கு பதில் கூறும்படியாக தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நயன்தாரா, மாதவன்,சித்தார்த் ஆகியோர் மேலதாளத்துடன் குத்து விளக்கை ஏற்றிய வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் நிருவனமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். இது புது வீடியோவா அல்லது படம் ஆரம்பிக்கும் முன்பு எடுக்கப்பட்ட வீடியோவா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. நடிகர் மாதவன் உடன் நயன்தாரா டெஸ்ட் ப்ரோமோஷனுக்காக காரில் செல்லும் லேட்டஸ்ட் காட்சிகளும் வெளியாகி உள்ளன.