விக்னேஷ் சிவனால் லவ் டூடே நடிகருக்கு அடித்த லாட்டரி … ரெண்டாவது படத்திலேயே டாப் நடிகைக்கு ஜோடியா?...

Pradeep Ranganathan and Vignesh Shivan
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் அந்த புராஜெக்ட்டில் இருந்து வெளியேறினார். கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் முழுமையாக ஸ்கிரிப்ட்டை முடிக்கவில்லை என்ற காரணத்தால் விக்னேஷ் சிவன் வெளியேறினார் என கூறப்பட்டது. மேலும் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என்பதுதான் காரணம் எனவும் கூறப்பட்டது.

AK 62
மகிழ் திருமேனி
இதனை தொடர்ந்து “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்தது. இத்தகவல் ஓரளவு உறுதிபடுத்தப்பட்ட தகவல் எனவும், இத்திரைப்படத்திற்கான கதை விவாதங்கள் நடந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

Pradeep Ranganathan
இந்த நிலையில்தான் விக்னேஷ் சிவன், “லவ் டூடே” இயக்குனரான பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கும் திரைப்படத்தை குறித்த ஒரு சூடான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதிக பட்ஜெட்
அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் பட்ஜெட் 45 கோடி என கூறப்படுகிறதாம். இது குறித்து மேலும் விசாரித்தபோது இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம்.

Nayanthara
லேடி சூப்பர் ஸ்டார்
மேலும் இத்திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளாராம். ஆனால் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். நயன்தாரா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். இவ்வாறு அந்தணன், அந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்.