படத்துக்கு முழுக்கு போடுகிறாரா நயன்தாரா?..அப்ப இனிமே அப்படித்தான் பாக்க போகிறோமா?..

by Rohini |   ( Updated:2022-10-02 14:26:59  )
nayan_main_cine
X

தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஹரியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நயன்தாரா. அந்த படத்தில் குடும்பபாங்கான கதைபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.

nayan1_cine

மேலும் க்ளாமரான தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடித்த நயன் காதல் வலையிலும் சிக்கி பல பிரச்சினைகளுக்கு ஆளானார். அதிலிருந்து மீண்டு நடிப்பின் மேல் கவனத்தை திருப்பி மக்கள் பார்வையை தன் மேல் திருப்பினார். அதன் மூலம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

nayan2_cine

சில மாதங்களுக்கும் முன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பார் என்ற செய்தியே வெளியானது. மேலும் அவருக்கு வயது அதிகமாக இருப்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதில் கொஞ்சம் சிக்கல் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்தது.

nayan3_cine

இந்த நிலையில் சமீபத்தில் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமம் இல்லை. இருந்தாலும் ஒரு ஒன்பது காலத்திற்கு நீங்கள் ஓய்வில் இருந்தால் வாய்ப்பு அதிகம் என்று கூறியதாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரெங்கநாதன் கூறினார். மேலும் அவரை தேடி பல படவாய்ப்புகள் வருகிறது எனவும் அதை ஒரு வித காரணங்கள் சொல்லி தவிர்த்து வருகிறார் என்றும் பயில்வான் தெரிவித்தார்.

Next Story