Connect with us
banner

விக்கி- நயன் திருமணத்திற்கு கோடியில் மொய் எழுதிய நிறுவனம்…! அம்மணி காட்டுல ஒரே பண மழைதான்..

vikki_main_cine

Cinema News

விக்கி- நயன் திருமணத்திற்கு கோடியில் மொய் எழுதிய நிறுவனம்…! அம்மணி காட்டுல ஒரே பண மழைதான்..

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகை நயன்தாரா மற்றும் தட்டிக் கொடுக்கும் இயக்குனர் என அழைக்கப்படும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இன்று இனிதே திருமணம் நடந்து முடிந்தது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் அரங்கேறியது.

vikki1_cine

திருமணத்திற்கு நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்கள். மேலும் கேரளாவிலிருந்து 10 பேர் கொண்ட குழு சண்டமேளத்திற்காக வரவழைக்கப்பட்டனர். மும்பையிலிருந்து பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.

vikki2_cine

திருமண மண்டபத்திற்குள் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப் படவில்லை. QR கோடு ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாரூக்கான் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

vikki3_cine

இந்த நிலையில் இவர்களது திருமண விழாவை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் 25 கோடி செலவில் வாங்கியுள்ளதாம். அதனால் தான் யாரையும் திருமண புகைப்படங்கள் எடுக்காதவாறு செல் போன் பயன்படுத்த அனுமதிக்க வில்லை என்று கூறி வருகிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விக்கி – நயன் திருமணம் நடந்து முடிந்தது. மாலையில் வரவேற்பு இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top