விக்கி- நயன் திருமணம் எந்த முறைப்படி நடக்கிறது..? விக்னேஷ் சிவனின் பதில்...!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட தமிழில் அனைத்து முன்னனி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு இன்று ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறார் என்றால் அவரின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே காரணமாகும். இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நானும் ரௌடிதான் படத்தின் மூலம் காதல் மலர்ந்தது.
அன்றிலிருந்து இன்று வரை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பரஸ்பரமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற ஜூன் 9 ஆம் தேதி இவர்களது திருமணம் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கிறது. இதனிடையே விக்னேஷ் சிவன் இன்று பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்து நன்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் 9 ஆம் தேதி திருமணம் முடிந்ததும் 11 ஆம் தேதி நானும் நயன்தாராவும் மீண்டும் இதே போல் பத்திரிக்கையாளர் பேட்டியில் வந்து ஒன்றாக சந்திக்கிறோம் என்று கூறினார்.அப்போது ஒரு நிரூபர் குறிக்கீடு உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்கிறது என்று கேட்டார். அதற்கு விக்னேஷ் சிவன் அவரை பார்த்து சிரித்து விட்டு மொபைல் போனை பார்த்துக் கொண்டே சென்று விட்டார்.