கண்டிஷன் போட்டு தாக்கும் விக்னேஷ் - நயன்தாரா.! இதெல்லாம் கேட்டால் இப்போவே தலை சுத்துதே...
கிட்டத்தட்ட 7 வருடங்களாக குறிப்பாக நானும் ரௌடி தான் பட சமயத்தில் இருந்து காதலர்களை தமிழ் சினிமாவில் வலம் வரும் காதல் ஜோடி தான் விக்னேஷ் சிவன் - நயன்தரா.
இவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அடுத்து இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்திருந்த வேளையில் , அது நாளை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, விஜய், ஏ.ஆர்.ரகுமான் என உச்ச நட்சத்திரங்கள் உட்பட சுமார் 200 விஐபிகளுக்கு பத்திரிகை கொடுத்து அழைத்துள்ளனராம்.இந்த லிஸ்டை கேட்டே ரசிகர்களுக்கு தலைசுற்றி விட்டனர்.
இதையும் படியுங்களேன் - நான் சொன்னதுதான் விருமாண்டி..கமல் எடுத்துட்டார்…இயக்குனர் ஆதங்கம்….
இது போதாதென்று தற்போது புது புது கண்டிசன்களை களமிறக்கியுள்ளனர் விழா ஏற்பாட்டாளர்கள். இந்த திருமண நிகழ்ச்சி வீடியோ உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் இந்த திருமண நிகழ்ச்சியை வீடியோ எடுக்க தடை போடப்பட்டுள்ள்ளது.
மேலும், அந்த விழாவுக்கு வருபவர்களுக்கு செல்போன் அனுமதி இல்லையாம். வீடியோ எடுக்க தடை, வழக்கமாக இருக்கும் அழைப்பிதழ் இருந்தால் தான் அனுமதி என்கிற கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.