பாரம்பரியமாக தொடரும் நடிகை -இயக்குனர் திருமண பந்தம்..! புதிய வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா..

by Rohini |   ( Updated:2022-05-29 08:52:43  )
nayan_main_cine
X

தமிழ் சினிமாவில் தொடரும் நட்சத்திர தம்பதிகள்.

நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகையிடம் உள்ள குணாதிசயங்களில் கவரப்பட்டு பின்னாளில் அவர்களே ஒரு நட்சத்திர தம்பதிகளாக மாறிவிடுவார்கள். உதாரணமாக அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா போன்றவர்களை சொல்லலாம். ஆனால் படத்தை எடுக்கும் இயக்குனர் தன் படத்தில் நடிக்கும் நடிகையின் மீது காதல் வையப்பட்டு அதுவே திருமணத்தில் போய் அரங்கேறிய சம்பவம் காலங்காலமாக நடந்து வருகிறது.

nayan1_cine

ஆரம்பகாலங்களில் இயக்குனராக இருந்த பாக்யராஜ் தன் படத்தில் நடித்த பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இதே பாணியில் டி.ராஜேந்திரன் உயிருள்ளவரை உஷா படத்தில் நடித்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்டார். குஷ்பு- சுந்தர்.சி, ஹரி-பிரீத்தா, மணிரத்னம்-சுஹாசினி, தேவையாணி-ராஜ்குமார் போன்ற தம்பதிகள் தாங்கள் நடித்த படங்களின் மூலம் இன்று சினிமா போற்றும் ஒரு உன்னதமான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

nayan2_Cine

இதே பாணியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஜோடி நடிகை நயன் தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவனும் தான் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த நயன் தாராவை காதலித்து இன்று திருமண பந்தத்தில் இணைய போகிறார்கள். ஜூன் 9ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

nayan3_cine

முக்கியமான விருந்தினர்கள் மட்டும் திருமணத்திற்கும் அழைப்பில் இருப்பதாக தெரிகிறது. இவர்களின் திருமணத்தை ஒட்டு மொத்த கோடம்பாக்கமும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் திருமண வாழ்க்கையில் எப்படி மற்ற பிரபலங்கள் உதாரணமாக இருக்கிறார்களோ அதே போல் இவர்களும் ஒரு நல்ல உதாரணமாக இருப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Next Story