Connect with us
nayan

Cinema News

செம க்யூட் நயன்….ஸ்மார்ட் விக்கி…வெளியான நயன்தாரா – விக்னேஷ் திருமண புகைப்படங்கள்…

கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.

 

இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கன், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

nayan

நயன் – விக்கி திருமணத்தை படம்பிடிக்கும் உரிமை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

nayan

எனவே, இந்த திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எதுவும் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நயன்தாரா திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் காலை முதல் வெளிவரவே இல்லை.

nayan

இந்நிலையில், தற்போது சில முக்கிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. திருமண கோலத்தில் நயன், விக்கி இருவரும் நடந்து வரும் புகைப்படங்களும், நயனுக்கு விக்கி தாலி கட்டும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

nayan

 

google news
Continue Reading

More in Cinema News

To Top