திருப்பதியில் சாமி தரிசனம்..! தம்பதிகள் சகீதமாக போஸ் கொடுக்கும் விக்கி- நயன்...!
நடிகை நயன்தாரா-விக்கி திருமணம் நேற்று கோலாகலமாக சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண கோலத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அச்சில் வார்த்த சிலை போல காணப்பட்டனர்.
வந்திருந்த அனைவரும் திருமண ஏற்பாடுகளை பார்த்து வாயடைத்து போய் நின்றனர். அந்த அளவிற்கு பாதுகாப்பு கெடுபிடிகளோடு திருமணம் நடைபெற்றது. அழைப்பிதழ்கள் இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை. QR கோடு ஸ்கேன் செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் திருப்பதி சென்று சுவாமி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். நயன் தாரா மஞ்சள் கலர் சேலையிலும் விக்கி பட்டு வேட்டியிலும் வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.
நாளை இருவரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். திருப்பதியில் எடுத்த இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.