
Cinema News
ரகசியமா சிக்கிய விக்கி – நயன் டான்ஸ் வீடியோ…! படப்பிடிப்பில் நடந்த கஜால் குஜால் சம்பவம்…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்தனர். முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.
வெளியானது முதலே நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இது காதல் கலந்த காமெடி படமாக இருப்பதால் ரசிகர்களின் ரசனைக்கும் உரிய படமாக திகழ்கிறது. இந்த நிலையில் படக்குழு இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எந்த அளவுக்கு செட்டில் இருப்பவர்களிடம் ஜாலியாக இருக்கிறார் என்பது தெரிகிறது.மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சூட்டிங்கின் போது டான்ஸ் ஆடும் காட்சியும் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. மற்றும் வெளி இடங்களில் நயன் எப்படி விக்கியின் கையை பிடித்து செல்வாரோ அதேபோல் அவ்வப்போது ஸ்பாட்டிலும் விக்கியின் கையை பிடித்து நிற்கிறார்.
இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நேற்று அன்னையர் தினம் என்பதால் விக்கி அவரின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிக்க கூட நயனும் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதோ அந்த வீடியோ :