ஏப்பா உங்க ஹனிமூன் இன்னும் முடியலயா?!...விக்கி - நயன் ஜோடியின் வைரல் ரொமாண்டிக் கிளிக்....
தமிழ் சினிமாவில் தற்போது நட்சத்திர தம்பதிகளாக உலா வரும் ஜோடி என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். கடந்த சில வருடங்களாக காதல் பறவைகளாக சுற்றி திறந்த இவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இருவரும் தங்களது திருமண வாழ்வை கோலாகலமாக ஆரம்பிக்க ஹனிமூன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டும் வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவர். திருமணத்திற்கு பிறகு சொல்லவா வேண்டும், அதைவிட அதிகமா புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மணி மும்பை சூட்டிங்கில் இருந்து விக்கியை பார்க்காமல் இருக்க முடியலயோ என்னவோ நேற்று இருவரும் சும்மா இறுக்கமாக அணைச்சு நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
இதை பார்த்து ரசிகர்கள் கல்யாணத்திற்கு முன்னாடியே ரொம்ப பண்ணுவாங்க இப்பொழுது சொல்லவா வேண்டும் என கலாய்த்து வருகின்றனர்.