திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா - தீயாய் பரவும் வீடியோ....

by சிவா |   ( Updated:2021-09-27 06:59:32  )
nayanthara
X

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் காதலித்து வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளவில்லையே தவிர இருவரும் ஒன்றாகவே வசித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் பெரும்பாலும் கொச்சினில் உள்ள நயன்தாராவின் வீட்டில்தான் இருக்கிறார். தனது பிறந்தநாள், நயன்தாராவின் பிறந்தநாள், ஓணம் என அனைத்து நாட்களிலும் நயனின் வீட்டில்தான் அவர் கொண்டாடுகிறார்.

nayanthara

மேலும், நயன்தாரா எங்கு சென்றாலும் பாடி காட் போல் விக்னேஷ் சிவனும் அவருடனே செல்கிறார். தற்போது விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

nayan4

இந்நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர். அப்போது சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story