Connect with us
murugadas

Cinema News

என்ன சார் நீங்க!. இப்படி காட்டினாத்தான் படம் பார்க்க வருவாங்க!.. முருகதாஸை அதிரவைத்த நயன்தாரா!..

சினிமா என்பதை கலை வண்ணம் என சொல்வார்கள். பல கலைகள் அடங்கிய ஒரு கலைதான் சினிமா. அதேநேரம், சினிமாவில் கவர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பேயாக தமன்னா நடித்தாலும் அவரை கவர்ச்சியாக காட்டினால்தான் ரசிகர்கள் படம் பார்க்க வருவர்கள். ஜெயிலர் பட வெற்றிக்கு தமன்னா கவர்ச்சியான உடையில் ஆடிய காவாலா பாடலும் முக்கிய காரணம்.

சினிமாவில் கவர்ச்சி என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. ஏனெனில், கவர்ச்சியை விரும்பாத ரசிகர்கள் யாரும் இல்லை. மூன்றாம் பிறை போன்ற கலை படத்தின் வெற்றிக்காக சில்க் ஸ்மிதாவோடு கமல் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதுதான் சினிமா. 80களில் கமல், ரஜினி படங்களில் கண்டிப்பாக சில்க் ஸ்மிதா ஒரு பாடலுக்கு வருவார்.

nayan

என்னதான் நல்ல கதை, சண்டை காட்சிகள், பாடல்கள் என இருந்தாலும் ரசிகனுக்கு கிளுகிளுப்பு ஊட்டுவது கவர்ச்சிதான். 80களில் கவர்ச்சி காட்டுவதற்கென்றே சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என சில நடிகைகள் இருந்தார்கள். கதாநாயகனுடன் ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டு செல்வார்கள்.

ஆனால், காலம் செல்ல செல்ல கதாநாயகிகளே கவர்ச்சி காட்ட துவங்கினார்கள். எனவே, ‘தனியாக கவர்ச்சி நடனத்துக்கு எதற்கு ஒருவர் ?’ என்கிற நிலை உருவானது. ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் எனில் ஒரு நடிகை கவர்ச்சியைத்தான் கையில் எடுப்பார். ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாராவும் அப்படித்தான்.

nayan

 

 

பில்லா, வில்லு ஆகிய படங்களில் நயன்தாரா காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். அதன்பின் அவர் லேடி சூப்பர்ஸ்டாராக மாறி தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகையாகவும் மாறினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்த படத்தில் அவருக்கு ஒரு பாடல் காட்சியும் உண்டு.

அந்த பாடல் காட்சியின் போது தொடை தெரியும்பாடி ஒரு ஸ்கர்ட்டை அணிந்து வந்திருக்கிறார் நயன். அதைப்பார்த்து அதிர்ந்து போன முருகதாஸ் ‘என்னமா இது.. இந்த அளவுக்கு வேண்டாம். முட்டிக்கு கீழே கொஞ்சம் வரணும்’ என சொல்ல.. நயனோ ‘என்ன சார் நீங்க. இப்படி டிரெஸ் பண்ணினாத்தான் கவர்ச்சியா இருக்கும்’ என சொல்லி இருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் கொடுத்த உடையை கத்திரிக்கோல் வாங்கி அவரே கொஞ்சம் கட் செய்து தொடை தெரியும்படி நடனமாடியிருக்கிறார். இப்போது அதே நயன்தான் 12 கோடி சம்பளம் கேட்கும் நடிகையாக மாறி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top