மகளிர் தினத்தை மஜாவா கொண்டாடிய நயன்தாரா.. F1 கார் ரேஸ் வேற.. சும்மா கலக்குறாரே!..

மகளிர் தினத்தை நயன்தாரா அளவுக்கு வேறு எந்த நடிகைகளும் சிறப்பாக கொண்டாடியிருப்பார்களா என்றால்? அது சந்தேகம் தான். கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாய்க்கு சென்ற நயன்தாரா அங்கே குழந்தைகளை டேக் கேரர்களிடம் கொடுத்து விட்டு கணவருடன் நைட் பார்ட்டியில் ஈடுபட்ட போட்டோக்களை எல்லாம் வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவுக்கு வயசாகிடுச்சு என்பதை கலாய்க்கும் விதமாக விக்னேஷ் சிவன் அவரை ஓல்டு ஒயின் என சொல்லி ஒயின் கிளாஸில் நயன்தாராவை படம் பிடித்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: படத்த விட என் உயிர்தான் முக்கியம்.. தயாரிப்பாளரை பார்த்து பயந்த நடிகை! அப்படி என்ன செய்தார்

இந்நிலையில், F1 கார் ரேஸ் பந்தயத்தை தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேரில் கண்டு ரசித்த வீடியோவையும் சற்று முன் நயன்தாரா வெளியிட்டுள்ளார். மகா சிவராத்திரியை பூஜா ஹெக்டே, தமன்னா எல்லாம் கோயிலில் கண் விழித்துக் கொண்டாடிய நிலையில், நயன்தாரா துபாயில் விக்னேஷ் சிவனுடன் வேறு மாதிரி கண் விழித்து கொண்டாடியிருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை மட்டுமின்றி அவரது அழகு மற்றும் ஆக்‌ஷன் நடிப்பால் பல நடிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு 30 கோடி!.. இந்தியன் 2 என்ன ஆகப்போகுதோ!.. இதுக்கே எண்டே இல்லையா?!…

கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் நயன்தாராவை கண்டுக் கொள்ளவில்லை என்றால், பாலிவுட்டில் தொடர்ந்து அவர் நடிப்பார் என தெரிகிறது. தமிழில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள டெஸ்ட் படம் வரும் சம்மருக்கு வெளியாகிறது.

மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் அந்த படத்தில் நடித்துள்ளனர். அடுத்து மண்ணாங்கட்டி எனும் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

 

Related Articles

Next Story