இயக்குனர் மறுத்தும் விடாமல் கவர்ச்சி விருந்தைக் காட்டிய நயன்தாரா... என்ன ஒரு எளிமை...!

சூர்யா ரசிகர்களுக்குப் புத்துணர்வு தரும் வகையில் கஜினி படத்தை ரீ ரீலிஸாக்கப் போகிறார்கள். இந்தப் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை வலைப்பேச்சு அந்தனன் சொல்கிறார்.

கஜினி படத்திற்காக கனகராஜ் என்பவர் சூர்யாவின் உடலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அதே போல எழுதினாராம். அந்த எழுத்துகள் அழியாமல் இருக்கணும்னா ஏசி அறையிலேயே சூர்யா இருக்க வேண்டுமாம். வெளியில் வந்து 20 நிமிடம் தான் சூட்டிங்கே எடுக்க முடியுமாம். அதன்பிறகு அழிந்து விடுமாம். அதனால் அவ்வப்போது அவரும் ஒரே மாதிரியாக எழுதினாராம்.

இதையும் படிங்க... விஜயை அரசியலில் தள்ளிய அந்த 2 சம்பவங்கள்… இப்போது காய் நகர்த்துவது சரிதானா..?

கஜினி படத்திற்காக ஒரு பாடலுக்கு நயன்தாரா ஸ்கர்ட் போட்டு வர வேண்டுமாம். அந்தப் பாடலுக்கு உடை உடுத்தி வந்தால் தொடை தெரியுற மாதிரி ஸ்கர்ட்டோட வந்தாங்களாம். ஆனால் அதைப் பார்த்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் அதிர்ச்சியாகி விட்டாராம்.... 'என்னம்மா இவ்வளவு கிளாமரா இருக்கு. இன்னும் கொஞ்சம் ஸ்கர்ட் கீழே இறங்கி இருந்தால் நல்லாருக்கும்'னு சொன்னாராம்.

அதற்கு நயன்தாரா... 'சார் இப்படி எல்லாம் இருந்தா யாராவது படம் பார்ப்பாங்களா... நீங்க என்ன சார் இதுவே இன்னும் குறைச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறேன். நீங்க இன்னும் இறக்கி இருக்கணும்னு சொல்றீங்களே...' அப்படின்னு சொன்னதும் முருகதாஸ்சுக்கு மேலும் அதிர்ச்சி. அதன்பிறகு அவரைக் கேட்காமலேயே காஸ்டியூமரை அழைத்து கத்திரியை எடுத்து வரச்சொல்லி இன்னும் கொஞ்சம் ஸ்கர்ட்டைக் கட் பண்ணி விட்டாராம்.

இதையும் படிங்க... மோகன், பூர்ணிமா காதலுக்கு பாக்கியராஜ் இடைஞ்சலாக இருந்தாரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

அதன்பிறகு கூடுதல் கவர்ச்சி. கேட்கவா வேணும். அது பலருக்கும் அதிர்ச்சி. இன்னொரு காரணம்... நான் வந்து பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் அவரே கத்திரியை எடுத்து நின்று கொண்டே ஸ்கர்ட்ட 'கட்' பண்ணினாராம். அந்த எளிமை நயன்தாராவிடம் இருந்ததாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story