Cinema News
மீண்டும் அந்த ‘பேய்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்… கதை யாரோடதுனு தெரியுமா…?
நடிகை நயன்தாரா திரைப்படத்தின் ஐரா பட இயக்குனருடன் மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருகின்றார். சினிமாவில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும் தன்னுடைய நடிப்பால் அதை எல்லாம் தவிடு பொடியாக்கி தற்போது சிறந்த நடிகையாக கொடிபட்டி பறக்கின்றார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு , மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் கடைசியாக தமிழில் 2023 ஆம் ஆண்டு வெளியான அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
தற்போது தமிழில் மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்திலும், மலையாளத்தில் ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா இந்திய அளவில் அதிக திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து அதனை வளர்த்து வருகின்றார்.
ஒரு பக்கம் சினிமா என பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றார். அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார். இது மட்டும் இல்லாமல் தனது பிசினஸையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்ற நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐரா. இந்த திரைப்படத்தை இயக்குனர் சர்ஜன் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தை பிரண்ட்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.