nayan

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போதே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் இருவரும் பெற்றோராக மாறினார்கள். அவ்வப்போது குழந்தைகளின் புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்கள். மேலும் பிறந்தநாள்,காதலர் தினம் போன்ற நாட்கள் வரும்போது உருகி உருகி காதலைப் பற்றிய பதிவிடுகிறார்கள்..

இந்நிலையில், இன்று காதலர் தினம் என்பதால் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து சொல்லி உருகியிருக்கிறார்.

சில ஆத்மாக்கள் நமது விதியில் எழுதப்பட்டிருக்கும்.. நாம் எப்போதோ சந்தித்தோம்.. நீதான் என்னுடைய ஆன்மா மற்றும் உயிர்..

நீ எனக்கு கிடைத்த சிறந்த வாழ்த்து.. என் அம்மா செய்த பிரார்த்தனையின் பலன் நீ.. .

உன்னோடு பத்து வருடம்.. இப்போதும் நீ அருகில் இல்லை என்றால் உன்னை மிஸ் பண்ணுகிறேன்..
நீதான் என்னுடைய வலிமை.. என்னை புரிந்தவன் நீ. என் வீடும் நீதான்..

கடவுள் ஒரு உள்நோக்கத்துடன்தான் உன்னை என் வாழ்கைக்குள் அனுப்பியிருக்கிறார். காதல் நிலையானது.. தைரியமானது.. மென்மையானது என்பதை கற்றுக் கொண்டேன்.. என்னை எப்போதும் நேசிப்பதற்கு நன்றி.. நான் மனம் உடையும்போது என் கைகளைப் பற்றிக் கொள்கிறாய்.. உலகம் கனமானதாக தோன்றும்போது நீ என் அருகில் இருக்கிறாய்..

உன்னை நான் சாதாரணமாக நேசிக்கவில்லை.. நான் உனக்கு நன்றி கடனாக இருக்கிறேன்.. உனக்காக பிரார்த்திக்கிறேன்.. ஒவ்வொரு நாளும் உன்னை தேர்ந்தெடுக்கிறேன்.. ஐ லவ் யூ பார்ட்னர்.. ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என்ன பதிவிட்டு உருகியிருக்கிறார்..