நடிகை நயன்தாரா-விக்கி திருமணம் நேற்று கோலாகலமாக சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண கோலத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அச்சில் வார்த்த சிலை போல தோன்றினர்.

Also Read
வந்திருந்த அனைவருக்கும் தடாபுடலாக விருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர். வகை வகையான உணவுகளுடன் மதிய உணவு களைகட்டியது. மேலும் நயன்தாரா அணிந்திருந்த அணிகலன்கள் அனைத்தும் வைரத்தாலும் மரகதத்தாலும் பொறிக்கப் பட்டன.

அவர் உடுத்திருந்த சேலை கைகளால் எம்பிராய்டரி டிசைன் போடப்பட்ட அடர் சிகப்பு நிற புடவையால் ஆனது.இந்த டிசைன்கள் அனைத்தும் கர்நாடகா பேரரசுகளான ஹொய்சாளர்கள் கட்டிய கோயில்களின் வடிவமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது. நயனின் பிளவுஸில் பெண் தெய்வம் லட்சுமியின் மோட்டிவ் டிசைன்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.

மேலும் விக்கி, நயனின் காதலை பறைசாற்றும் விதமாக அவர்களை போல் உள்ள பேட்டர்ன்கள் சின்ன சின்ன டிசைன்களால் பிளவுஸ்கள் முழுவதும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இருவரும் தேர்ந்தெடுத்து திருமணத்தை கொண்டாடியுள்ளனர்.



