கண்மணியை வைரத்தாலே அழகு பார்த்த விக்கி... நயன் அணிந்திருந்த நகைகளில் இவ்ளோ விஷயம் இருக்கா?
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரும் நடிகையுமான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றது. திருமணத்திற்கு நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், திரைபிரபலங்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்தில் நயன் - விக்கி என்ன மாதிரியான உடையில் இருப்பார்கள்? என்னென்ன நகைகள் அணிந்திருப்பார்கள்? என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் அதிகரித்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் கல்யாணம் முடிந்த கையுடன் மதிய வேளையில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
அதில் நயனும் விக்கியும் அசந்து போகிற அளவிற்கு அற்புதமாக காட்சியளித்தார்கள். மேலும் நயன் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் வைரத்தாலும் மரகதத்தாலும் ஜொலித்தவை. அத்துடன் ஏழு அடுக்குகளுடன் கூடிய ஆரத்தையும் அணிந்திருந்தார். இந்த ஆரம் வைரம் மற்றும் ரோஸ் கட்ஸ், போல்கி, மரகத கற்களால் ஆனது.
சோக்கர் மற்றும் போல்கி கற்கள் பதிக்கப்பட்ட ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். நயன் அணிந்திருந்த வளையலும் மரகதத்தால் ஆனது. இந்த நகைகள் இந்திய மதிப்பின் படி பல கோடிகளை தாண்டும் என குறிப்பிடப்படுகிறது. தன் கண்மணியை இயக்குனர் விக்னேஷ் சிவன் வைரத்தால் அழகு பார்த்து தன்பால் ஈர்த்துக் கொண்டார்.