பாவம்.. நயன்தாராவுக்கு நேரமே சரியில்லை!.. ஓடிடி ரிலீஸிலும் இப்படியொரு சிக்கலா?..

Published on: December 29, 2023
---Advertisement---

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி அவரது 75வது படம். இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா அந்த படத்தை இயக்கினார். ஷங்கர் உதவி இயக்குநர் என்றதும் அட்லீ என நினைத்துக் கொண்டார்.

அதே போல நயன்தாராவை கவிழ்க்க காஸ்டிங்கில் சத்யராஜ், ஜெய்யை உள்ளே கொண்டு வந்திருந்தார் நிலேஷ் கிருஷ்ணா. அன்னபூரணி படம் வெளியான போது மிக்ஜாம் புயல் காரணமாக மக்கள் தியேட்டருக்கு செல்லவில்லை. அது போல தற்போது ஓடிடி ரிலீஸ் சமயத்திலும் யாருமே நெட்பிளிக்ஸ் பக்கம் போய் அந்த படத்தை பார்க்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு இனி 70 ரூபாய் தான் டிக்கெட்டா?.. பிவிஆர் சர்ப்ரைஸ்.. எப்படி தெரியுமா?

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் அன்னபூரணி இன்று வெளியாகி உள்ளது. ஆனால், கேப்டன் விஜயகாந்த் மறைவு காரணமாக அவருக்கு இறுதி அஞ்சலி இன்று செலுத்தப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த மக்களும் நேரடியாகவும், டிவியில் செய்திகள் வாயிலாக விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை பார்த்த நிலையில், அன்னபூரணி படம் ஓடிடியில் கூட சரியாக ஓடவில்லை என்கின்றனர்.

ஏற்கனவே நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யத்தான் இந்த படத்தையே நெட்பிளிக்ஸில் நயன்தாரா வெளியிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர். ஆனால், இதன் மூலமும் நெட்பிளிக்ஸுக்கு லாபம் கிடைப்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

இதையும் படிங்க: புரமோஷனுக்கு வர முடியும்… துக்கம் கேட்க வரமுடியாதா? சிக்கிய சிவகார்த்திகேயன், தனுஷ்..!

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.