தொடர்ந்து பிளாப் படங்களில் நடித்தாலும் நயன்தாராவுக்கு 12 கோடி சம்பளம்!.. இதுதான் காரணமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-03-10 05:24:16  )
Nayanthara
X

Nayanthara

தமிழ்த்திரை உலகில் அழகு மட்டும் அல்லாமல் நடிப்பிலும் ஜொலிப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கம்பீரமாக நடிப்பதிலும் கெத்தாக இருப்பார். பில்லா படத்தில் அஜீத்துடன் இவரின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும்.

நயன்தாரா சினிமாவில் நடிக்க வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பிக் அப் ஆனார். சரத்குமாருடன் நடித்த ஐயா படத்தில் தான் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தொடர்ந்து ரஜினியுடன் இவர் நடித்த சந்திரமுகி இவரது மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியது.

இதையும் படிங்க... சினிமால கூட இப்படி காட்டலயே!.. வேறலெவலில் காட்டி கிறங்கவைக்கும் ராஷி கண்ணா…

அதன்பிறகு அஜீத், விஜய், தனுஷ், சிம்பு, ஆர்யா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தமிழ் சினிமா உலகின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனார்.

இவருடன் திரிஷாவும் போட்டி போட்டுக் கொண்டு படங்களில் நடித்து வந்தார். என்றாலும் நயன்தாரா தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். தற்போது நயன்தாராவிற்கு பல படங்கள் தோல்வி அடைந்துள்ளன.

நயன்தாரா நடித்த 10 படங்கள் வரை தொடர்ந்து நஷ்டம் வருகிறது. அப்படி இருந்தும் அவருக்கு 12 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்னு தெரியுமா? வலைப்பேச்சு தளத்தில் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாமா...

Nayanthara

Nayanthara

நயன்தாராவின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது என்று இண்டஸ்ட்ரியில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரு வேளை தனது நிறுவனங்களுக்கு அவரை வைத்துப் படம் எடுத்தால் கௌரவம் என்று கூட நினைக்கலாம் என்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அவங்க எடுத்த படத்தோட கதை சரியா இல்லை. நம்ம படத்துக்கு நல்ல கதை. அதனால ஓட வாய்ப்பு இருக்கு என்று கூட நினைக்கலாம். நயன்தாரா நடிச்சாலே படம் செம ஹிட்டா ஆகிடும்னு கூட அவங்க நினைக்க வாய்ப்பிருக்கு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நயன்தாரா கடைசியாக நடித்த படங்களில் இறைவன், பிகில், காத்துவாக்குல ரெண்டு காதல் , அன்னபூரணி என பல படங்கள் தோல்வியைத் தழுவின என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story