Thalapathy 69: அதெல்லாம் முடியாது... விஜய்க்கே 'விபூதி' அடித்த நடிகை?..

vijay
Thalapathy 69: அரசியல் கடலில் குதித்து இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து சமீபத்தில் அதன் முதல் பொதுக்கூட்டத்தினை விக்கிரவாண்டியில் நடத்தினார். மேலும் ஆட்சியில் பங்கு தருகிறேன் என பிற கட்சிகளுக்கும் அவர் வலை விரித்து இருக்கிறார்.
தளபதி 69 படம் தான் விஜயின் கடைசி படமாகும். ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜையால் கட்சியின் பந்தக்கால் நடும் விழாவிற்கே விஜய் செல்லவில்லை. அந்தளவிற்கு விஜய் இப்படத்தின் மீது ஆர்வம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: Vijay: விஜயின் மாஸ் ஹிட் படத்தை ஜஸ்ட் மிஸ்ஸில் விட்ட சூர்யா… எல்லாம் தம்பியால் வந்த வினை!..
படத்தில் இடம்பெறும் சிலபல பஞ்ச் டயலாக்குகளையும் அவரே எழுதி இருக்கிறாராம். முழுக்க அரசியல் படமாக உருவாகி வரும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பரங்கிமலையில் நடைபெற்றது. அங்கு ராணுவம் தொடர்பான சில காட்சிகளை படம்பிடித்து இருக்கின்றனர்.
இந்தநிலையில் சிவகாசி, வில்லு, பிகில் என பல்வேறு படங்களில் விஜயுடன் இனைந்து ஆடிப்பாடிய நயன்தாராவை இப்படத்தில் நடித்து கொடுக்குமாறு விஜய் கேட்டிருக்கிறார். ஆனால் கதையை கேட்ட நயன் படத்தில் எனக்கு முக்கியமில்லை என்று கூறி வாய்ப்பினை நிராகரித்து விட்டாராம்.

Nayanthara
இதனால் பற்களை நறநறவென கடித்து தன்னுடைய கோபத்தினை தளபதி கட்டுக்குள் வைத்திருப்பதாக தெரிகிறது. ஜவான் படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் காட்சிகளை வெட்டவைத்து அதில் படம் முழுவதும் வந்து போனவர் நயன். அவரைப்பத்தி தெரிந்தும் இப்படி கேட்டு இருக்கிறாரே நடிகர் என கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கிறது.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: படிச்சவங்க எப்படி நடந்துப்பாங்க… கேப்டனை ‘ரோஸ்ட்’ செய்த விசே