தாய்லாந்தில் ரொமான்ஸ் பண்ணும் நயன் - விக்கி...தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்..

கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.
இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கான், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்தவுடன் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தற்போது இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். ஒரு நாளைக்கு முன்பு இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து ‘தாய்லாந்தில் தாரத்துடன்’ என விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது இருவரும் ரொமான்ஸ் செய்யும் மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ஆர்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.