Connect with us

Cinema News

எனக்கு அந்த விஷயம் செய்ய ரெம்ப பிடிக்கும்.! குறும்பு தனமாக உண்மையை உளறி நஸ்ரியா.!.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார் நடிகை நஸ்ரியா நசீம். இவர் தமிழ் திரையுலகில் நடிப்பதற்கு முன்னரே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி விட்டார். அதன் பிறகு, ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நடித்து தற்போது பலருக்கும் பிடித்த நடிகையாக இருக்கிறார்.

இளம்வயதிலேயே மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு பொறுப்பான மனைவியாக இருந்து வந்த அவர், அண்மையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அண்மையில், நடிகர் நானி உடன் இணைந்து நஸ்ரியா நடித்துள்ள அடடே சுந்தரேஷா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார்.

இதையும் படியுங்களேன் – ஜட்டி விளம்பரத்தில் கூட நடிச்சிரலாம்.! பெரிய நடிகர்களை வெளுத்து வாங்கிய மனோபாலா.!

அப்போது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் எது என்று கேட்கப்பட்டபோது. அப்போது , ‘எனக்கு நடிப்பதை காட்டிலும், வீட்டை நிர்வகிப்பது மிகவும் பிடிக்கும்.’ என மிகவும்  குறும்புத்தனமாக தனது பதிலை கூறினார் நஸ்ரியா. அவரது கணவர் பகத் பாசில் மிகவும் அற்புதமான நடிகர். அவர் நடிப்பை பார்த்து பயந்து தான், தனக்கு குடும்ப நிர்வாகமே போதும் என்று நஸ்ரியா முடிவெடுத்திருக்கிறார் போலும். என்று பலரும் சிலாகித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top