என்ன இது சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை? பேரைக் கேட்டதும் படத்தில் இருந்து விலகிய நடிகை
Actor Sivakarthikeyan: கோலிவுட்டில் ஒரு ஆகச் சிறந்த நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா ஒரு படத்தை எடுக்கப் போவதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. சூரறைப் போற்று படத்தின் வெற்றிக்கும் பிறகு சுதா கொங்கராவும் சூர்யாவும் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்க நினைத்தார்கள். அந்தப் படத்தின் டைட்டில் கூட வெளியானது.
இதையும் படிங்க: ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!
புறநானூறு என்ற தலைப்பைக் கொண்ட அந்தப் படம் ஹிந்தி எதிர்ப்பை பற்றிய படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. அதனால் சூர்யா அந்தப் படத்தில் இருந்து விலகினார். அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது. சூர்யாவுடன் இணைந்து அவருடைய நிறுவனமும் படத்தில் இருந்து விலகியது.
மேலும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா போன்ற நடிகர்களும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சூர்யா விலகி சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு படத்தின் பெயரும் மாற்றப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: போட்டிக்கு வர்ற கங்குவா படத்தைப் பற்றி ரஜினி என்ன நினைப்பாரு? வேற லெவல் திங்கிங்..!
புறநானூறு பெயரை போல சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்திற்கு ஒரு பழம்பெயரை வைக்க சுதா கொங்கரா ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முதலில் சூர்யா என்று சொன்னதும் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் நடிக்க வந்த நஸ்ரியா சூர்யா விலகியதும் நஸ்ரியாவும் இந்தப் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் துல்கர் சல்மானும் படத்தில் இருந்து விலகியிருக்கிறாராம். அதன் பிறகே ஸ்ரீலீலா இந்தப் படத்திற்குள் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் என்பவர்தான் தயாரிக்கிறார்.
இதையும் படிங்க: என் வயசு என்ன? எனக்கே நடந்திருக்கு.. இந்த வயசு நடிகையுமா அவங்க விடல?