எனக்கு என்னமோ பண்ணுது...! ஓரமா நின்னு நஸ்ரியா பண்ற காரியத்தை பாருங்க...
திரையுலகத்திற்கு வந்த வேகத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை நஸ்ரியா. பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் நடிப்புத் திறமையும் இருந்தமையால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பாராட்டும்படி நடந்து கொண்டார்.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த அவர் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் தற்போதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நினைவில்
நிற்பவர் நடிகை நஸ்ரியா அவரது குறும்புத்தனமான நடிப்பும் கொள்ளை அழகு அவரை இன்னும் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த நஸ்ரியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், தனக்கு நல்ல மார்க்கெட் இருந்தபோதுதான் அவருக்கு திருமணம் நடந்தது. தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயத்தில் தனது புகைப்படங்களை இணையத்திலும் பரப்பி வருகிறார்.
இந்த நிலையில் மாடர்னான கவுன் போட்டுகொண்டு சுவர் ஓரமாக நின்று போஸ் கொடுக்கிற மாதிரியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வழக்கமான தனது குறும்புத் தனமான முக பாவனையோடு போஸ் கொடுத்துள்ளார்.