நானியுடன் ஜோடி சேர்ந்தார் ராஜாராணி பட நடிகை..! அப்போ அவருடைய கதி..?
திரையுலகத்திற்கு வந்த வேகத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை நஸ்ரியா. பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் நடிப்புத் திறமையும் இருந்தமையால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பாராட்டும்படி நடந்து கொண்டார். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த அவர் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் தற்போதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நினைவில் நிற்பவர் நடிகை நஸ்ரியா அவரது குறும்புத்தனமான நடிப்பும் கொள்ளை அழகு அவரை இன்னும் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த நஸ்ரியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், தனக்கு நல்ல மார்க்கெட் இருந்தபோதுதான் அவருக்கு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு அவர் ஒப்புக்க கொள்ளவில்லை. நஸ்ரியா விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என்றும், தனது கணவர் ஜோடியாகவே நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் நடிகர் நானியுடன் தெலுங்கு படம் ஓன்றில் கமிட் ஆகியுள்ளார். விவேக் ஆத்ரேயா எழுதி இயக்கி வரவிருக்கும் "அந்தே சுந்தராணிகி" தெலுங்கு மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தின் சூட்டிங் அப்போ எடுத்த ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.